பி.இ. கலந்தாய்வு : 👥மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு

பி.இ. கலந்தாய்வு, துணைக் கலந்தாய்வுக்கு கட்டணம் செலுத்திவிட்டு பங்கேற்காத மற்றும் 4 சுற்றுகளிலும் 🏫கல்லூரி மற்றும் பாடப்பிரிவில் இடம் ஒதுக்கப்படாத 👥மாணவர்களுக்கும் இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தரமணி தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூலை 30ம் 📆தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. மேலும் அன்றைய 📅தினம் மாலை 4 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் கலந்துகொள்ள பூர்த்தி செய்த 📋விண்ணப்ப படிவத்தின் நகல், மதிப்பெண் பட்டியல் மற்றும் சாதி சான்றிதழ், இருப்பிடச்சான்று, மாற்றுச் சான்றிதழுடன் மாணாவர்கள் வர வேண்டும் என்று 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬