புதிய கல்வி கொள்கையால் மதம் சார்ந்த கல்வி மீண்டும் தலை தூக்கும்

  |   Salemnews

ஓமலூர், ஜூலை 29: புதிய கல்வி கொள்கையால் மதம் சார்ந்த கல்வி மீண்டும் தலை தூக்கும் வாய்ப்புகள் கொண்டு வரப்பட உள்ளதாக விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.தமிழ்நாடு அறிவியல் இயக்க தாரமங்கலம் கிளை சார்பில், தாரமங்கலத்தில் வரைவு தேசிய கல்விக்கொள்கை பொதுக்கூட்டம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவரும், மருத்துவக் கல்லூரி துணை பேராசிரியருமான திருநாவுக்கரசு, கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மணி மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து பேசினர்.

இந்த கல்வி கொள்கையின்படி 3 வயது குழந்தைக்கு மும்மொழி கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 3ம் வகுப்பு, 5ம் வகுப்பு, 8வகுப்பு மற்றும் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். மேலும், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றை கட்டாயமாக படிக்க வேண்டும். மதம் சார்ந்த கல்வி மீண்டும் தலை தூக்கும் வாய்ப்புகள் கொண்டு வரப்படுகிறது. மருத்துவத்திற்கு நீட் தேர்வைப்போல 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வி பயில தேசிய தகுதித் தேர்வு கொண்டுவரப்படும். அதன் பிறகே கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளிலும் சேரமுடியும். பள்ளிகள் அரசு மற்றும் தனியாரால் இணைந்து நடத்தப்படும்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/r4CXJAAA

📲 Get Salemnews on Whatsapp 💬