புதுவை மாணவர்களின் எம்பிபிஎஸ் இடங்கள் கபளீகரம்

  |   Puducherrynews

புதுச்சேரி, ஜூலை 29: பிராந்திய இட ஒதுக்கீடு என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளாக மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், உயிரியல் சார்ந்த பாடப்பிரிவுகள் என உயர்க்கல்விகளில் புதுவை மாணவர்களுக்கான இடங்கள் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களை உள்ளடக்கியது. காரைக்கால், மாகே, ஏனாம் பகுதி மாணவர்கள், கல்வியில் பின்தங்கி இருந்ததால், கடந்த 2006ம் ஆண்டு பிராந்திய இட ஒதுக்கீட்டு வழங்கப்பட்டது. இதன் மூலம் அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.டெக் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளில் புதுச்சேரி- 75 சதவீதம், காரைக்கால்- 18, மாகே- 4, ஏனாம்- 3 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

புதுச்சேரி பிராந்தியத்திற்கு 75 சதவீத இடங்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அரசாணையில் புதுச்சேரிக்கு மட்டும் என தனியாக குறிப்பிடவில்லை. காரைக்கால், மாகே, ஏனாம் மாணவர்கள், அவர்கள் பிராந்தியங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகள் மட்டுமின்றி, புதுச்சேரி பிராந்தியத்தின் பொதுப்பிரிவில் உள்ள சீட்டுகளையும் கபளீகரம் செய்து வருகின்றனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/P4UdUQAA

📲 Get Puducherrynews on Whatsapp 💬