பயிர் காப்பீட்டு திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு

  |   Salemnews

இழப்பீடு கிடைக்க நடவடிக்கைஓமலூர், ஜூலை 29: சேலம் மேற்கு மாவட்ட தமாகா தலைவர் சுசிந்திரகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், சொர்ணவாரி நெற்பயிர் மற்றும் இதர காரீப் பருவ பயிர்களை பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீடு செய்ய அரசாணை வெளியிட்டது. காப்பீட்டுத் தொகையில் 2 சதவீதம் மட்டும், அதாவது நெற்பயிருக்கு ஏக்கருக்கு ₹554ம், இதர காரீப் பருவ பயிர்களான மக்காச்சோளம் ₹330, மணிலா ₹480, சோளம் ₹196, கம்பு ₹198, சாமை ₹159, எள் ₹180 என காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும். ஆனால், வேளாண் காப்பீடு திட்டத்தில் இணைந்து பிரிமியம் தொகை செலுத்தி இருந்தாலும் விவசாயிகள் தனி நபர் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு தொகை பெற முடிவதில்லை.

பயிர் காப்பீடு திட்டத்தில் சேரும் விவசாயிகளிடம் இருந்து, கோடிக்கணக்கான ரூபாய் காப்பீட்டு பிரிமியம் தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சில லட்சங்கள் கூட இழப்பீடு கிடைப்பதில்லை. காப்பீடு பெறும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் லாபமடையும் நிலையில், விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என விவசாய சங்கங்கள் வெளிப்படையாக குற்றம்சாட்டுகின்றன. எனவே, காப்பீடு திட்டத்தில் விவசாயிகளின் பங்களிப்பு தொகை, வழங்கப்பட்ட காப்பீடு தொகை போன்ற விவரங்களை மாவட்டம் வாரியாக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு சுசிந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/ZHgt-QAA

📲 Get Salemnews on Whatsapp 💬