மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

  |   Salemnews

ஓமலூர், ஜூலை 29: ஓமலூர், தீவட்டிப்பட்டி, தாரமங்கலம் உட்பட அனைத்து ஒன்றியங்களிலும், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 30ம் வரை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 5ல் சேலம் அரசு மருத்துவமனையில் முகாம் துவங்குகிறது. தொடர்ந்து 8ம் தேதி வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 9ம் தேதி தீவட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 14ம் தேதி வனவாசி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 16ம் தேதி இடைப்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அயோத்தியாப்பட்டணம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது.

மேலும், ஆகஸ்ட் 19ம் தேதி மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 21ம் தேதி மேச்சேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்ககிரி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 22ம் தேதி கொங்கணாபுரம் கே.ஏ.என். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம் அரசு மருத்துவமனையிலும் நடக்கிறது. ஆகஸ்ட் 26ம் தேதி மகுடஞ்சாவடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தலைவாசல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 28ம் தேதி கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓமலூர் பாத்திமா மகளிர் மேனிலைப்பள்ளியிலும், ஆகஸ்ட் 30ம் தேதி வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/86r0cQAA

📲 Get Salemnews on Whatsapp 💬