மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி

  |   Salemnews

மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுஇடைப்பாடி, ஜூலை 29: மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சேலம் மாவட்ட பஞ்சாயத்து விளையாட்டு சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், கைப்பந்து, கால்பந்து, கோகோ, கபடி உள்ளிட்ட போட்டிகள் இடைப்பாடி ஆச்சார்யா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு வயதிற்குட்பட்டோர் பிரிவிலான போட்டியில் சௌந்தர்ராஜன், சிவனேஷ், தர்ஷன், சர்வேஷ், நிகந்த், முக்கேஷ், பிரவின், வசந்த், பாக்கியஸ்ரீ, சஞ்சீவ் ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர்.

இதேபோல், பிரனேஷ், பாலமுருகன், நந்தினி, கமலக்கண்ணன், கிஷோர், சிவநேசன், கோபிநாத் ஆகியோர் 2ம் இடமும் பிடித்தனர். பின்னர், நடைபெற்ற விழாவில் சேலம் மாவட்ட பஞ்சாயத்து விளையாட்டு சங்க தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்து பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். நிழ்ச்சியில் சிலம்பு சங்க மாவட்ட தலைவர் செந்தில்ஆனந்த், ஆச்சார்யா கல்வி நிறுவன நிர்வாகிகள் சுரேஷ், தினேஷ், முதல்வர் மதிவாணன், பஞ்சாயத்து விளையாட்டு சங்க மாவட்ட செயலாளர் சதீஷ்ராஜ், பொருளாளர் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/c7iUigAA

📲 Get Salemnews on Whatsapp 💬