வீரகனூரில் பொது பணத்தில் வாழ்த்து பேனர் வைத்ததால் அதிருப்தி

  |   Salemnews

கெங்கவல்லி, ஜூலை 29:கெங்கவல்லி தாலுகா வீரகனூர் பேரூராட்சிக்குட்பட்ட சொக்கனூர் மேற்கு காட்டுக்கொட்டாய் அக்ரஹாரம் பச்சைமலை அடிவாரத்தில், புதிய ஏரி அமைக்க 110 விதியின் கீழ் சுமார் ₹29 கோடி மதிப்பீட்டில் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த ஏரி அமைப்பதற்காக சொக்கனூர் பகுதி விவசாயிகளும், தன்னார்வலர்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனளிக்காததால், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து சட்டப்போராட்டம் நடத்தியும் சுமார் 40 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் தங்களால் தான் கொண்டு வரப்பட்டது என கூறி ஆளுங்கட்சியினர் சிலர் தம்பட்டம் அடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த வாரம் முதலமைச்சர் சேலம் வந்தபோது அவருக்கு நன்றி தெரிவிக்க செல்வதாக கூறி தனியார் உயர்நிலைப்பள்ளியின் இரண்டு பேருந்துகளை எடுத்துக்கொண்டு, அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கட்சியினர் சேலம் சென்றனர். காலை உணவு கூட வாங்கித் தராமல் சுமார் 12 மணிக்கு மீண்டும் ஊரில் கொண்டு வந்து விட்டு விட்டதாக அதிமுகவினரே புகார் வாசிக்கின்றனர். மேலும், விளம்பர பேனர்கள் வைத்தது உட்பட அனைத்து செலவுகளையும் ஊர் பொதுப்பணத்தில் இருந்து செய்துள்ளனர். பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், ஊர் தேரை சீர்படுத்தவும் வழியின்றி திண்டாடி வரும் வேளையில் இந்த தேவையற்ற செலவு தேவையில்லாதது என்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/mtsxvwAA

📲 Get Salemnews on Whatsapp 💬