வாழப்பாடி அருகே டாரஸ் லாரி மீது வேன் மோதி 11 பேர் படுகாயம்

  |   Salemnews

வாழப்பாடி, ஜூலை 29: வாழப்பாடி அருகே டாரஸ் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர். இதேபோல், மற்றொரு விபத்தில் டிரைவர் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், இடைப்பாடியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு சொந்தமான டாரஸ் லாரி, சென்னையில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு கோவை மாவட்டம் அன்னூர் நோக்கி நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. லாரிக்கு பின்னால், திருக்கோவிலூரில் இருந்து டிராவல்ஸ் வேனில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி கோயிலுக்கு சிலர் சென்று கொண்டிருந்தனர்.

அதிகாலை 3.30 மணியளவில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் வந்தபோது, வேன் லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் மோதிய வேன், மேம்பால சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் சென்றவர்களில் 11 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/2mT9UAAA

📲 Get Salemnews on Whatsapp 💬