59-வது வாரமாக வால்பாறை சாலையில் பிளாஸ்டிக் அகற்றி வரும் Target Zero இளைஞர்கள்

  |   Coimbatorenews

கோவை மாவட்டம் ஆழியாறு - வால்பாறை வனப்பகுதிகளில் சாலையோரத்தில் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மக்காத பொருட்களை அகற்றும் பணியில் Target Zero அமைப்பு இளைஞர்கள் கடந்த 58-வாரங்களாக ஈடுபட்டனர்.. இந்த களப்பணிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது, கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி சிற்பி அறக்கட்டளை சார்பாக டார்கெட் ஜீரோ குழு ஒருங்கிணைப்பாளர் பாலா அவர்களுக்கு சிறந்த சமூக நற்பணிகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில் 59-வது வாரமாக நேற்று தொடர்ந்த இந்த களப்பணியில் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த களப்பணி ஐந்தாவது கொண்டை ஊசி வளைவு அருகே நடைபெற்றது.. கரடுமுரடான பகுதியிலும் கயறு மூலமாக இறங்கி பிளாஸ்டிக் குப்பைகளை தூய்மை படுத்தினர்..

இந்த களப்பணியில் தங்களையும் இணைத்து கொள்ள கீழே உள்ள எண்ணிற்கு அழைக்கலாம்.

இது குறித்து Target Zero பாலா அவர்கள் கூறியதாவது...

டார்கெட் ஜீரோ குழுவின் தொடர் 59வது களப்பணி இன்று வால்பாறை செல்லும் சாலையில் ஐந்தாவது கொண்டை ஊசி வளைவு அருகே நடைபெற்றது.... இன்றைய களப்பணியில் ஐந்து பைகளில் வனத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையுடன் உதவியுடன் முழுமையாக அகற்றினோம்..... கடந்த வாரம் 33 வது மழை நீர் வடிகால் வாய்க்காலை தூய்மைப்படுத்தினார்கள் தோழர்கள்.... கடந்த வாரம் பொழிந்த மழையால் இதன் வழியே மழை நீர் மட்டுமே அணையை சென்றடைந்து என்பதே எங்கள் குழுவினருக்கு மகிழ்ச்சி... எங்களுடன் இணைந்து சேவையாற்ற விருப்பம் எனில் வாருங்கள் நாம் இணைந்து அடுத்த தலைமுறைக்கு மாற்றத்தை ஏற்படுத்துவோம்... வனம் காப்பது நம் அனைவரது கடமையும் கூட... இலக்கை எட்டி அடையும் வரை நம்பிக்கையுடன் பயணிப்போம்.... என கூறினார்....

போட்டோ - http://v.duta.us/bXLhZwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/XNKCLAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬