இரண்டு புதிய நிறங்களில் அசத்தும் BMW மோட்டார்சைக்கிள்

  |   Coimbatorenews

பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 எஸ் மோட்டார்சைக்கிள்கள் புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 எஸ் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்படுகின்றன. எனினும், இவை சர்வதேச சந்தைக்கென உருவாக்கப்படுகின்றன. இந்த மாடல்கள் கே.டி.எம். டியூக் 390 மாடலுக்கு போட்டியாக இருக்கின்றன.

என்ட்ரி லெவல் பி.எம்.டபுள்யூ. ப்ரியர்களை கவர பி.எம்.டபுள்யூ. இந்தியா முடிவு செய்துள்ளது. அந்த வகையில், தனது வாகனங்களை சந்தைப்படுத்துவதில் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. அவ்வாறு பி.எம்.டபுள்யூ. நிறுவனம் சத்தமில்லாமல் ஜி 310 ஆர் காஸ்மிக் பிளாக் மற்றும் ஜி 310 எஸ் மாடலை ஸ்டிராடோ புளு மெட்டாலிக் நிறத்திலும் அறிமுகம் செய்துள்ளது.

இரு நிறங்களும் வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்டப்பின் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஃபியூயல் டேன்க் எக்ஸ்டென்ஷன்கள். முன்புற மட்-கார்டு, டெயில்பீஸ் உள்ளிட்டவை தற்சமயம் காஸ்மிக் பிளாக் நிறம் பெற்றிருக்கின்றன.

பி.எம்.டபுள்யூ. ஜி 310 எஸ்

பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 எஸ் மாடல்களில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், இவை மோட்டார்சைக்கிளின் தோற்றத்தை மேம்படுத்திக் காண்பிக்கிறது. ஸ்டிரீட் ஃபைட்டர் மாடலில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஸ்டிராடோ புளு நிறம் பி.எம்.டபுள்யூ. ஜி 310 எஸ் மாடலில் புதிய நிறம் ஆகும்....

போட்டோ - http://v.duta.us/FlZmYAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/a8-a7gAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬