உடல்நலத்தை காரணம் காட்டி சரணடையாத 🏨’சரவண பவன்’ 👴ராஜகோபால்😳

✍இளவேனில்🌄
🏨சரவண பவன் உணவகத்தில் பணிபுரிந்த ஊழியர் 👤ராமசாமியின் மகள் 👩ஜீவஜோதி. இவரது கணவர் 👨பிரின்ஸ் சாந்தகுமார். 👩ஜீவஜோதியை 💍மறுமணம் செய்யும் நோக்கத்தோடு, சரவண பவன் அதிபர் அண்ணாச்சி 👴ராஜகோபால், சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று 2001-ம் ஆண்டு கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் மட்டுமின்றி கடத்தல் வழக்கிலும் 3 ஆண்டுகள் ⛓சிறை தண்டனையும் விதித்து பூந்தமல்லி சிறப்பு 🏛நீதிமன்றம் தீர்ப்பு⚖ வழங்கியது. இதை 😡எதிர்த்து ராஜகோபால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க⏫ கோரி🙏 அரசு தரப்பில் 📜மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆயுள் தண்டனையை எதிர்த்து🚫 ராஜகோபால் தரப்பில் 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது😯. இந்த வழக்கில் 🏛சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டையை உறுதி👍 செய்து உச்சநீதிமன்றம் கடந்த 📆மார்ச் மாதம் உத்தரவிட்டது⚖. ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் ராஜகோபால் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவு⚖ பிறப்பிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு அவர் ஆஜராகவில்லை🙄. மேலும், அவருக்கு நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 💉மருத்துவ சிகிச்சையில் இருக்கும் அவரை உடனே 🏛நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது❌ என்றும் கூறி, சரணடைய கால அவகாசம் 🙏கோரி 🏛உச்சநீதிமன்றத்தில் 📜மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬