🏛கர்நாடகாவில் அனைத்து 👥மந்திரிகளும் ராஜினாமா✍

✍இளவேனில்🌄
🏛கர்நாடகா மாநிலத்தில் 💺குமாரசாமி தலைமையிலான 🤝கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த 21 காங்கிரஸ் மந்திரிகள் தாமாக முன்வந்து தங்களது பதவியை இன்று ✍ராஜினாமா செய்ததாக சித்தராமையா தெரிவித்தார்📣. இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ரேவண்ணா 🏡இல்லத்தில் அக்கட்சியை சேர்ந்த மந்திரிகளின் ஆலோசனை🤔 கூட்டம்👥 இன்று பிற்பகல் நடந்தது. பின்னர், 11 மந்திரிகளும் தங்களது பதவியை ✍ராஜினாமா செய்து விட்டதாகவும் புதிய மந்திரிசபை விரைவில் அமைக்கப்படும்😳 எனவும் 💺முதல்வர் குமாரசாமியின் 🏢அலுவலகம் வெளியிட்ட 📰செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது😯. இதற்கிடையில், தற்போது நிலவிவரும் அரசியல்போக்கு தொடர்பாக தனக்கு எந்த வருத்தமும்😟 இல்லை🚫 என குமாரசாமி தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬