கரும்பாறை மாகாளியம்மன் கோவிலின் பாரம்பரியம்!

  |   Coimbatorenews

கேரளா எல்லையில் உள்ள மலைக்குன்றின் மேல் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த கரும்பாறை மாகாளியம்மன் கோவிலில், பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.

ஜமீன்காளியாபுரத்துக்கும் - பெரும்பதிக்கும் மத்தியில், மேற்கு நோக்கி செல்லும் வண்டிப்பாதையில் உள்ளது கரும்பாறை எனும் மலைக்குன்று. மரம் செடிகொடிகள் மற்றும் விவசாய நிலங்களை அரணாகக் கொண்ட குன்றின் மீது கோவில் உள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கோரிக்கை நிறைவேறி விட்டால், அம்மனுக்கு கோவில் கட்டவும் தயராகி விடுகின்றனர். ஆனால், குறி கேட்டபின், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும், அபிஷேகமும் மட்டுமே செய்கின்றனர்.அந்தளவுக்கு அம்மன் தனது இருப்பிடத்தை இடிக்கவோ, திருத்தி கட்டடம் எழுப்பவோ யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை.இதனால், பக்தர்களின் மனம் குளிர அருளும் அம்மன், தனக்கென்று எதுவும் வேண்டாம் என மறுத்துவிடுவது தான் வினோதம்.இக்குன்றின் கீழிருந்து கோவில் வரை விளக்குகள், அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பதியில் இருந்து கோவிலுக்கு தண்ணீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இக்குன்றின் மீதேற படிகள் வெட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போதும் அம்மன் வீற்றிருப்பது அரசமரத்தடியில் தான்....

போட்டோ - http://v.duta.us/wvADxgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/8sbLVAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬