💺ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு 🏡இல்லமாக மாற்றுவதற்கான அவசியம் என்ன⁉-🏛உயர்நீதிமன்றம் கேள்வி

✍இளவேனில்🌄

சென்னை போயஸ்கார்டனில் 🌱அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வாழ்ந்த 🏡வீடான, வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 💺ஜெயலலிதாவின் அண்ணன் மகள் 👩ஜெ.தீபா, அண்ணன் மகன் 👨ஜெ.தீபக் ஆகியோர் சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், "சுமார் 💰100 கோடி ரூபாய் மதிப்புள்ள வேதா நிலையத்தை வெறும் 💰ரூ.35 கோடிக்கு அரசு வாங்க உள்ளது" என்றும் 😡குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, 🏛நீதிமன்றம் "👥மக்களின் 💸வரிப்பணத்தில் 💺ஜெயலலிதாவின் 🏡வேதா நிலையத்தை, 💺ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றவேண்டியதன் அவசியம் என்ன❓" என கேள்வி எழுப்பியது. மேலும், "ஜெயலலிதாவின் புகழை பரப்புவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன😯. அமைச்சர்கள் தினமும் ஜெயலலிதாவின் புகழைத்தான் பாடுகின்றனர். ⛰கோடநாட்டில் 💺ஜெயலலிதா தங்கியிருந்தார் என்பதற்காக அதையும் நினைவு இல்லமாக மாற்றுவீர்களா❓” என கேட்ட 🏛நீதிமன்றம், இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை🗣 வரும் 📆22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬