நீட் மசோதா நிராகரிப்பு🚫 விவகாரம் குறித்து பேரவையில் 💺ஓபிஎஸ் விளக்கம்🗣

✍இளவேனில்🌄

✍நீட் தேர்வில் இருந்து 🏛தமிழகத்துக்கு விலக்கு🚫 அளிக்க தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக😳 மத்திய அரசு, 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பேரவையில் தமிழகத்தின் மசோதாவை நிராகரித்த மத்திய அரசைக் 😡கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்🙏. இதற்கு பதிலளித்த துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வம், "சட்டமன்ற தீர்மானங்களை பரிசீலிப்பது குடியரசுத்தலைவரின் பணி. இதனால், மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் இயற்ற முடியாது" என்று விளக்கமளித்தார்🗣. இந்நிலையில் இவிவகாரத்தில் குறிக்கிட்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் 🤵சி.வி.சண்முகம், "✍நீட் தேர்வு விலக்கு மசோதா நிராகரிக்க🚫 பட்டதற்கான காரணம் ஆராயப்படும்👍. மசோதா சரி செய்யப்பட்டு மீண்டும் 🏛மத்திய அரசை வலியுறுத்த வாய்ப்பு இருக்கிறது" என்று கூறினார்.
இதையடுத்து பேசிய முதல்வர் 💺பழனிசாமி, "🏛நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் உள்ள விஷயம் இது. சட்ட வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்கள் கருத்தை கேட்டறிந்து மீண்டும் நீட் தேர்வில் இருந்து 🚫விலக்கு 🙏கோரும் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக முடிவெடுக்கப்படும்😯" என்று தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬