💦நீர் பற்றாக்குறையில் 🏛தமிழகம் முதலிடம்😱-🏛மத்திய அரசு📣

✍இளவேனில்🌄

🇮🇳தேசியளவில், மொத்தமுள்ள 4 ஆயிரத்து 378 நகரங்களில் 756 நகரங்களில் 🌊நீர் பற்றாக்குறை உள்ளதாக நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமும், ஜல்சக்தி அமைச்சகமும் பட்டியலிட்டுள்ளது😯. அதில், ⏫அதிக நீர்ப்பற்றாக்குறை நகரங்களின் எண்ணிக்கையுள்ள 🏛மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது😳. தமிழகத்தை அடுத்தே ராஜஸ்தான் இடம்பெற்றுள்ளது🙄. மூன்றாம் இடத்தில் நாட்டிலேயே அதிக 👥மக்கள் தொகை உள்ள 🏛உத்தரப்பிரதேசம் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து 🏛மத்திய அரசு சார்பில், ☔மழை நீரை சேமிக்கும் வசதியுள்ள புதிய 🏗கட்டிடங்களுக்கே குடியேறுவதற்கான அனுமதி அளித்தல், ☔மழை நீர் சேகரிப்பை அமல்படுத்த உத்தரவிடுவதோடு⚖ அதை திறம்பட கண்காணித்தல்👀, நீர் நிலைகளைத் தூர்வாருதல், நீரை சுத்திகரித்தல் மற்றும் மறுசுழற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬