நேற்று 56-வது வாரமாக தொடர்ந்த டார்கெட் ஜூரோ வின் களப்பணி

  |   Coimbatorenews

கோவை மாவட்டம் ஆழியார் அணைப்பகுதி முதல் வால்பாறை வரையிலான வனபகுதியை ஒட்டியுள்ள சாலையில் கடந்த 55-வாரங்களாக சாலையோரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் களப்பணியில் Target Zero இளைஞர்கள் களம் இறங்கியுள்ளனர். முதல் வாரம் இருந்த அதே உற்சாகத்துடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் களப்பணியினை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை ஆழியாறு அருகே உள்ள வால்பாறை சாலை காண்டூர் கால்வாய் நேற்று 56-வது வாரமாக மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே இருந்த மக்காத குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை Target Zero-இளைஞர்கள் அகற்றினர்.

இது குறித்து Target Zero பாலா அவர்கள் கூறியதாவது....

டார்கெட் ஜீரோ குழுவின் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற 56 வது களப்பணி 7/ஜூலை, 2019ல் ஆழியாரில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே இருந்த பிளாஸ்டிக், வாட்டர் பாட்டில், மது பாட்டில்களை முழுமையாக அப்புறப்படுத்தினோம்.....

இன்று 29 வது மழை நீர் வாய்க்காலில் அடைத்து இருந்த கழிவுகளை அகற்றினோம்.......

போட்டோ - http://v.duta.us/mfJmuAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/6936FQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬