பாகிஸ்தான் பொருட்களுக்கு 💸200% சுங்கவரி-👥மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்👍

✍இளவேனில்🌄

🏔ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 🏛புல்வாமா மாவட்டத்தில் கடந்த 📆பிப்ரவரி 14ம் தேதி அன்று பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 👥35 பேர் பலியாகினர்😟. இதைதொடர்ந்து, 🇮🇳இந்தியாவுக்கு மிகவும் உகந்த நாடு என்று பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து🚫 செய்தது. மேலும், பாகிஸ்தானில் உற்பத்தியான மற்றும் அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பும் பொருட்களின் மீது 200% சுங்கவரி விதிக்க பிரதமர் மோடி தலைமையிலான 🏛மத்திய அரசு தீர்மானித்தது😳. முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆலோசனைப்படி, இதற்கான அறிவிக்கை கடந்த 📆பிப்ரவரி 16ம் நாள் வெளியிடப்பட்டது😯. இந்நிலையில், இந்த முடிவுக்கு 🏛பாராளுமன்றத்தின் ✍ஒப்புதலைக் 🙏கோரி மத்திய நிதித்துறை இணை அமைச்சர் 🤵அனுராக் தாக்குர் பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்த தீர்மானம் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது👍. இந்த நடவடிக்கையானது நடப்பு 💸நிதியாண்டின் 📆ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் 381 மில்லியன் டாலராக, 🇮🇳இந்தியாவுக்கான பாகிஸ்தானின் ஏற்றுமதியைத் தாக்கும் என கருதப்படுகிறது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬