மஞ்சள் தூள் என நினைத்து சாணி பவுடரை சாப்பிட்ட சிறுமிகள்; தடாகத்தில் பரபரப்பு

  |   Coimbatorenews

மஞ்சள் தூள் என நினைத்து சாணி பவுடரை சாப்பிட்ட சிறுமிகள்; தடாகத்தில் பரபரப்பு

கோவை மாவட்டம் தடாகம் அருகே வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் மஞ்சள் தூள் என நினைத்து சாணி பவுடரை சாப்பிட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தடாகம் அருகே உள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சிறுமிகள் நேற்று இரவு கூட்டாஞ்சோறு சமைத்து விளையாடி கொண்டிருந்தனர். சிறுமிகள் சோற்றில் மஞ்சள் தூளுக்கு பதிலாக, சாணி பவுடரை தெரியாமல் கலந்து விட்டனர், இதையடுத்து பதறிய பெற்றோர்கள் உடனடியாக ஆறு பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து உடல்நலம் தேறிய குழந்தைகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையத்திற்கு மாற்றியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தடாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

போட்டோ - http://v.duta.us/drBV7AAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/DGXXEgAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬