மும்பையில் அடுத்த ⌚24 மணி நேரத்தில் மிக பலத்த ☔மழை எச்சரிக்கை⚠

✍இளவேனில்🌄

🏛மும்பையில் கடந்த சில நாட்களாக ☔பருவமழை தீவிரமடைந்துள்ளது😳. இதனால் விடாது பெய்த கனமழை காரணமாக ஏராளமான இடங்களில் 🌊வெள்ளபெருக்கு ஏற்பட்டது. தாதர் ஹிந்த்மாதா, பரேல், சேனாபதி பாபட் மார்க், சயான், பிரதிக்‌ஷா நகர், செம்பூர் போன்ற பகுதிகளில் 💦மழை நீர் தேங்கியதால் 🚗வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது😟. வடாலாவில் 🛣சாலையில் தேங்கிய நீர் சில கட்டிடங்களில் உள்ள 🏘குடியிருப்புக்குள் சென்றது😯. இந்நிலையில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சாலை, 🚊ரயில் மற்றும் ✈விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தெளிவாக பார்க்க முடியாத👀 சூழல் நிலவுவதால் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வரவேண்டிய சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பப்பட்டன😐. இந்நிலையில் மும்பையில் அடுத்த ⌚24 மணி நேரத்தில் மிக ☔பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬