வைகோ மனு நிராகரிப்பு⁉-🌞திமுக சார்பில் மேலுமொருவர் வேட்புமனு தாக்கல்📜

✍இளவேனில்🌄

🏛தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 👥6 உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 📆18ம் தேதி 🗳தேர்தல் நடைபெறுகிறது. இதில் 🌱அதிமுக சார்பில் 3 பேரும், 🌞திமுக சார்பில் 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்பதற்கேற்ப 📜வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, 🇮🇳இந்திய 🙏இறையாண்மைக்கு எதிராக பேசியதாகத்🗣 தொடரப்பட்ட வழக்கில், வைகோவுக்கு ஓராண்டு ⛓சிறை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டுக்கு அவகாசமும்⌚ வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின்⚖ காரணமாக, வைகோவின் 📜மனு ஏற்கப்படுமா⁉, நிராகரிக்கப்படுமா⁉ என சந்தேகங்கள்🤔 எழுந்துள்ளன😳. இதற்கான விடை 📜வேட்புமனு பரிசீலனையின்போது கிடைக்கும்😯 என வைகோ கூறியுள்ளார். இந்நிலையில், 🌞திமுக சார்பில், அக்கட்சியின் சட்ட ஆலோசகர் 👤என்.ஆர்.இளங்கோ, 🗳மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்🎉. எதிர்பாராத சூழ்நிலையை சமாளிக்கும் வகையில் மாற்று ஏற்பாடாகவே😐, திமுக சார்பில் மேலும் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬