கொள்ளையர்களை விரட்டிய 🏛நெல்லை தம்பதிக்கு 🏆வீரதீர செயல் விருது🎉

✍இளவேனில்🌄

🏛நெல்லை மாவட்டம் கடையத்தில் 🗡அரிவாளால் தாக்கி 🏡வீட்டில் திருட முயன்ற இரு கொள்ளையர்களை வயதான தம்பதிகளான 👴சண்முகவேல், 👵செந்தாமரை தம்பதி அடித்து விரட்டிய 📹சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரிடமும் வரவேற்பை🙂 பெற்றுவருகிறது. இந்த சம்பவத்தின்போது துணிகரமாக செயல்பட்டு திருடர்களை அடித்து விரட்டிய அந்த வீரத்தம்பதியர்களை பாராட்டவும்👏, மேலும் இதுபோன்ற நேரங்களில் எப்படி சாமர்த்தியமாக செயல்பட வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்👍 என்பதற்காக சண்முகவேல், செந்தாமரை தம்பதிக்கு 🏆வீர தீர செயல் விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது😯. நெல்லை மாவட்ட 💺ஆட்சியர் இந்த விருதுக்கு பரிந்துரை🗣 செய்துள்ளதாகவும், நாளை நடக்கும் 🇮🇳சுதந்திர 📆தின விழாவில் 💺எடப்பாடி இந்த 🏆விருதை வழங்க உள்ளார் எனவும் 📰செய்திகள் வெளியாகியுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬