📆சுதந்திர தினம்-🇮🇳நாடு முழுவதும் ⏫உச்ச கட்ட பாதுகாப்பு💪

✍இளவேனில்🌄

🇮🇳நாட்டின் 73-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட🎊 உள்ள நிலையில் தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் ⏫உச்ச கட்ட 💪பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தேசியக் 🇮🇳கொடியேற்றி உரையாற்ற🗣 உள்ள 🏛டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது😯. காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து பதற்ற😨 சூழல் நிலவுவதால் இம்முறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன🎉. குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும், 🏔காஷ்மீர் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப்பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது💪. மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 🚉ரயில் நிலையங்கள், 🚌பேருந்து நிலையங்கள், திரையரங்குள் என 👥மக்கள் கூடும் இடங்களில் 💪பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது⏫. காஷ்மீரிலும் சுதந்திர தினம் கோலகலமாக கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬