🏦ரிசர்வ் வங்கிக்கு கடிதம் ✍எழுதியுள்ள ராகுல் காந்தி😯

✍இளவேனில்🌄

🏛கேரளாவில் தென்மேற்கு ☔பருவமழை தீவிரமடைந்து கனமழையாக கொட்டித் தீர்த்த நிலையில், மாநிலம் முழுவதும் பெரும் சேதத்தை😟 சந்தித்துள்ளது. இதையடுத்து, 🏛வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி 🌊வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள 👥மக்களை நேரில் சந்தித்து👀 ஆறுதல் கூறினார். இந்நிலையில், ☔கனமழையால் மீண்டும் பாதிக்கப்பட்ட கேரள 🌾விவசாயிகளுக்கான 💸கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர், 🏦ரிசர்வ் வங்கி கவர்னர் 🤵சக்திகாந்த தாசுக்கு 📄கடிதம் எழுதியுள்ளார்✍. அதில்," 🏛கேரளா மாநிலம் கடந்த ஒரு ஆண்டுக்குள் மிக மோசமான ☔மழை பாதிப்பை சந்தித்துள்ளது🙄. எனவே, கேரள 🌾விவசாயிகள் செலுத்த வேண்டிய விவசாய 💸கடனை செலுத்துவதற்கான ⌚காலக்கெடுவை 2019, 📆டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க வேண்டும்😯" என வலியுறுத்தியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬