வெள்ளியங்கிரி ⛰மலை அடிவாரத்தில் 🏘வீடுகள் கட்டும் திட்டத்திற்கு தடை🚫

✍இளவேனில்🌄

🏛கோவையில் ⛰வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஆலங்குடி, களிமங்கலம் பகுதிகளில் தென்கரை, செரூர், செட்டிபாளையம், பச்சனவயல் கிராமங்களை சேர்த்து 🏘4,710 வீடுகள் கட்ட தமிழ்நாடு 🏘குடிசைமாற்று வாரியம் திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டது🎉. இதை எதிர்த்து😡 மலைவாழ் பழங்குடியின 👥மக்களின் சமூக அமைப்பொன்று 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இது குறித்த விசாரணை நடந்த நிலையில், அரசு 🤵வழக்கறிஞர் இந்த திட்டத்திற்கு நகர அமைப்புத்துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது😯. ஆனால் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் பரிந்துரை🗣 மட்டுமே பெறப்பட்டுள்ளது. ✍ஒப்புதல் வழங்கப்படவில்லை🚫 என அதற்கான 📄ஆவணங்களை சமர்ப்பித்தார்👍. அதேபோல் மனுதாரர் தரப்பு குறிப்பிடுகையில், அந்த மலைப்பகுதி அருகில் செயல்பட்ட இண்டஸ் எனும் 🏢கல்லூரி மூடப்பட்டது🔒. மூடப்பட்ட அந்த கல்லூரிக்கு 100 மீட்டருக்கு அருகில்தான் இந்த 🏘4,710 வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக வாதாடினர்😳. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ⛰மலை பாதுகாப்பு அமைப்பின் ஒப்புதல் பெறாதவரை வீடுகட்டும் திட்டப்பணிகளுக்கு தடை🚫 விதித்து வழக்கை 📆செப்டம்பர் 18ம் தேதி ஒத்திவைத்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬