ஆழியாறு 🌊அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு 💧தண்ணீர் திறப்பு

பழைய ஆயக்கட்டின் முதல் போக பாசனத்துக்கு ஆழியாறு 🌊அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கடந்த 2 📆மாதங்களாக விவசாயிகள் கோரி விடுத்து வந்தனர். அணையின் நீர் இருப்பு மிக குறைந்த அளவே இருந்ததால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க 🙄முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி ⛰மலையில் உள்ள பி.எ.பி தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஆழியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 🌧கனமழை பெய்த காரணத்தால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து இன்று முதல் டிசம்பர் 31ம் 📆தேதி வரை 135 நாட்களுக்கு 1059 மில்லியன் கன அடிக்கு குறைவு இல்லாமல், தினமும் 129 கன அடி முதல் பாசன நீர் தேவைக்கேற்ப 🌊தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬