கூகிள் மேப்ஸுக்கு மாற்றாக ஹவாய் நிறுவனத்தின் 'மேப் கிட்' வருகிறது

  |   Coimbatorenews

கூகிள் மேப்ஸை சவால் செய்யும் முயற்சியில், சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ஹவாய் தனது சொந்த மேப்பிங் சேவையை 'மேப் கிட்' என அழைக்க திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் காரணமாக ஹவாய் நிறுவன போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்த சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஹவாய் நிறுவனம் ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக ஹார்மனி என்ற இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் கூகுளின் பிரபலமான கூகுள் மேப்ஸுக்கு மாற்றாக மேப் கிட் என்ற சேவையை ஹவாய் தற்போது உருவாக்கி வருகிறது.

ஆண்ட்ராய்டை போலவே இதுவும் ஓபன் சோர்ஸ் என்பதால் தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தும் அனைத்து செல்போன்களிலும் இதனைப் பயன்படுத்த இயலும் என்பது சிறப்பு.

ARCore மற்றும் ARKit ஐ ஆதரிக்கும் iOS சாதனங்களுக்கும் லைவ் வியூ என்ற புதிய பீட்டா அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வரைபடங்கள், 150 நாடுகளின் வரைபடங்கள் என 40 மொழிகளில் மேப் கிட்டை உருவாக்கி வருவதாக ஹவாய் தெரிவித்துள்ளது. மேப் கிட் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதம் வெளிவரலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

போட்டோ - http://v.duta.us/T5FHJQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/1xYg9gAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬