சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  |   Chennainews

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய மிதமான மழை பெய்தது. சென்னையின் புறநகர் பகுதிகளான போரூர், ராமாபுரம், வண்டலூர், தாம்பரம், குரோம்பேட்டை, கிண்டி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. சென்னை அம்பத்தூர், கொரட்டூர், பட்டபிராம், மாங்காடு, செம்பரபாக்கம், திருவேற்காடு, மதுரவாயல், குன்றத்தூர், திருநின்றவூர், பூவிருந்மவல்லி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, சோழவரம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

இதேபோல், தமிழகத்தில் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், தர்மபுரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, பாகலூர், உத்தனப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, சோழவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், தூத்துக்குடி, கோவில்பட்டி, விழுப்புரம் என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று மழை பெய்தது....

போட்டோ - http://v.duta.us/jVMVkQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/o8ykFAAA

📲 Get Chennainews on Whatsapp 💬