நம்ம ஊரு சமையல் : உடலுக்கு சத்து தரும் சாமை கஞ்சி...

  |   Coimbatorenews

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்கு வகிப்பது சாமை. அரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

தேவையான பொருட்கள் :

சாமை - 1 கப்

சின்ன வெங்காயம் - 10

மோர் - 1 கப்

உப்பு - தேவையானது

செய்முறை :

• ஒரு கப் சாமையை மூன்று கப் தண்ணீருடன் குக்கரில் மூன்று விசில் வரும்வரை வைத்து எடுக்கவேண்டும்.

• மோரைக் கடைந்து தேவையான உப்புடன் சேர்க்கவேண்டும்.

• சாமையும் மோரும் சேர்ந்து கட்டியில்லாமல் கலக்கவேண்டும்.

• சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து சாப்பிடலாம்.

• சாமை கஞ்சியை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

• கோடை வெயிலுக்கு மிகவும் சிறந்தது இந்த சாமை கஞ்சி...

போட்டோ - http://v.duta.us/exQFEAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/R6k9ZwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬