🥛பால் விலை உயர்வு ஏன் - 💺முதல்வர் விளக்கம்

சேலம் ✈விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி அளித்த பேட்டியில், "பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை ஏற்று கொள்முதல் விலை, விற்பனை விலை ⏫உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக விலை உயர்த்தவில்லை. விற்பனை விலை கொள்முதல் விலை இரண்டும் கணக்கிட்டுதான் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பால் கூட்டுறவு 🏢சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. டீசல் விலை உயர்வால் 🚚போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது" என அவர் கூறினார். மேலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் மட்டும் தான் பாலின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் 🗣கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬