ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

  |   Chennainews

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு: மூர்மார்க்கெட்டில் இருந்து நாளை, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் எளாவூர் - சூலூர்பேட்டை இடையே ரத்து செய்யப்பட்டு மூர்மார்க்கெட்- எளாவூர் வரை இயக்கப்படும். அதேப்போல், மறுமார்க்கத்தில் சூலூர்பேட்டையில் இருந்து நாளை, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் சூலூர்பேட்டை- எளாவூர் இடையே ரத்து செய்யப்பட்டு எளாவூர்- மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும். மேலும், சேலம்- எழும்பூர் இடையே சேலத்தில் இருந்து இன்று இரவு 9.20 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

திருச்சி- எழும்பூர் இடையே சுவிதா ரயில்

திருச்சி- எழும்பூர் இடையே சுவீதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: திருச்சி- சென்னை எழும்பூர் இடையே சுவீதா சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து இன்று இரவு 9.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் மறுநாள் காலை 4 மணிக்கு எழும்பூர் ரயில்நிலையம் வந்தடையும். அதைப் போன்று எழும்பூரில் இருந்து நாளை பிற்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் மாலை 6.15 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

போட்டோ - http://v.duta.us/bdlBSAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/gpEzBAAA

📲 Get Chennainews on Whatsapp 💬