கோவையில் மத்திய அரசின் விருது பெற்ற 460 ஆண்டுகள் பழமையான தேக்குமரம்

  |   Coimbatorenews

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்து பரம்பிக்குளம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள சுமார் 460 ஆண்டுகள் பழமையான தேக்கு மரத்தைப் பார்க்க, சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவைமாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தையடுத்து அமைந்துள்ளது பரம்பிக்குளம் புலிகள் காப்பகம். கேரளமாநிலத்திற்குட்பட்ட இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள்,தவறாமல் பார்க்க விரும்பும் ஒரு அம்சமாக விளங்குவது சுமார் 460 ஆண்டுகள் பழமையான கன்னிமாரா எனப்படும் தேக்குமரம் ஆகும். உலகின் மிகப்பழமையான மரங்களுள் ஒன்றாக இருக்கும் இத்தேக்குமரம் சுமார்.7.மீ சுற்றளவும்,50.மீட்டர் உயரமும் உடையதாகும்.இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இம்மரத்தின் சுற்றளவை,தங்கள் கைகளை இணைத்துக் கொண்டு அளப்பதும், இதன் கீழ் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் பெரிதும் விரும்புகின்றனர்.

2011-ம் ஆண்டு கணக்கின்படி இந்த மரத்திற்கு சுமார் 460- வயது இருக்கும் என கணக்கிட்டுள்ளனர். அப்போதைய உயரம் 39.98-மீட்டர். சுற்றளவு, 7.02-மீட்டர். அதற்கு பிறகும் மரம் குறைவான வேகத்தில் வளர்ந்து கொண்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் கண்டுகொள்ளப்பட்ட மரங்களில் இதுதான் அதிக வயதுடைய மரம் என்று கூறும் வனத்துறையினர் இப்போது இந்த மரத்தின் உயரம்:- 130-அடிக்கு மேலிருக்கும் என்கின்றனர். மரத்தி சுற்றி நின்று ஐந்து பேர் கைகளையும் சேர்த்து பிடித்தால் தான் இந்த மரத்தை கட்டிப்பிடிக்க முடியும். மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள இயற்கையின் அதிசியங்களில் இதுவும் ஓன்று....

போட்டோ - http://v.duta.us/N1AmzwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/eMADuQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬