சிறப்பு ஒலிம்பிக் அதிகாரிகள் இருவர் நிதி கையாடல் செய்ததாக வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  |   Chennainews

சென்னை: சிறப்பு ஒலிம்பிக் பாரத் இயக்குனர் மற்றும் ஆசிய பசிபிக் சிறப்பு ஒலிம்பிக் மேலாளர் மீதான புகார் குறித்து ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த 3ஆம் தேதி முதல் சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதனை நடத்தும் சிறப்பு ஒலிம்பிக் பாரத் அமைப்பின் தமிழக இயக்குனர் பால் தேவசகாயம், ஆசிய பசிபிக் சிறப்பு ஒலிம்பிக் மேலாளர் ஜான் நாகராஜன் ஆகியோர் நிதி கையாடல் செய்ததாகவும் வீரர்களை தேர்வு செய்ததில் வெளிப்படை தன்மை இல்லை எனவும் மனோ ரஞ்சனி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது நேரில் ஆஜராகாத பால் தேவசகாயத்திற்கும், ஜான் நாகராஜனுக்கும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கார்த்திகேயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் நேரில் ஆஜராகி சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும் தங்களுக்கு எதிராக எந்த புகாரும் இல்லை எனவும் தெரிவித்தனர்....

போட்டோ - http://v.duta.us/9a454QAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/gG2WdAAA

📲 Get Chennainews on Whatsapp 💬