புதிதாக ⛽பெட்ரோல் பங்குகள் அமைப்பதற்கான தடை-🏛மத்திய அரசு மனுத்தாக்கல்📜

✍இளவேனில்🌄

🏛தமிழகத்தில் புதிதாக ⛽பெட்ரோல் பங்குகள் அமைப்பதற்கான அறிவிப்பாணைக்கு📜 தடை🚫 விதிக்க கோரிய வழக்கில் அது கொள்கை ரீதியான முடிவு என்று 🏛மத்திய அரசு பதில் மனு📜 தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை முன்பு விசாரித்த🗣 நீதிமன்றம் தமிழக ஊரக பகுதிகளில் 5 ஆயிரத்து 125 பெட்ரோல் பங்குகளை அமைப்பதற்கான 💸டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது😯. இந்நிலையில் 🤵நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது ⛽பெட்ரோலிய நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "முன்பை விட தற்போது 🚗வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில், அதிக பெட்ரோல் பங்குகள் தேவைபடுகிறது😳, இது 🏛அரசின் கொள்கை ரீதியான முடிவு, இதில் 🏛நீதிமன்றம் தலையிட முடியாது🚫. விதிகளை பின்பற்றி தான் பெட்ரோல் பங்குகள் அமைக்கப்படுகிறது👍" என கூறி பதில் 📜மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை 📆ஆகஸ்ட் 21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬