பறை இசையை எட்டுத்திக்கும் கொண்டுசெல்லும் - கோவை நிமிர்வு கலையகம்

  |   Coimbatorenews

தமிழரின் பாரம்பரிய இசை பறை இசை. இந்த பறை இசையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் விதமாக பல இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் பயிற்சி வகுப்புகள் மூலம் கற்றுக்கொடுத்து வருகின்றனர் கோவையைச் சேர்ந்த நிமிர்வு கலையகம் குழுவினர்.

பறை… கலை… இயற்கை… மக்களுக்கே எனத் தொடங்குகிறது பறை இசை நிகழ்ச்சி. இசை சங்கமிக்கும்போது அரங்கமே அதிரும்படியாக ஒலிக்கிறது பறை. ஆதித் தமிழரின் பாரம்பரிய இசைக் கருவிகளில் ஒன்றான பறை, தற்போது அழிந்துவரும் கலைகளில் ஒன்று. அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் களம் இறங்கி, அதில் வெற்றியும் கண்டுவருகின்றனர்.

இவர்கள் வாசிக்கும் பறை வழக்கமான சமயச் சடங்குகளுக்கானது அல்ல. இந்தக் கலையை முற்றிலுமாகப் புதுப்பிக்கும் திட்டமே இவர்களுடைய வாசிப்பில் எதிரொலிக்கிறது. வே.சக்தி. மற்றும் ஹரிதாஸ், பிரபாகரன், துரை மற்றும் அவர்களின் நண்பர்கள் இணைந்து இக்குழுவை உருவாக்கியுள்ளனர்.

உடைக்க வேண்டிய எண்ணம்

இசை ஆர்வமுள்ள மாணவர்களைக் கொண்டு 2011-ல் இவர்கள் ‘நிமிர்வு’ கலையகத்தைத் தொடங்கிப் பறை இசையைப் பரப்பிவருகிறார்கள். கல்லூரிகளில் தொடங்கி, கார்ப்பரேட் நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள்வரை இசைத்துவருகிறார்கள். மக்களிடமும் நல்ல வரவேற்புப் பெறத் தொடங்கியுள்ளனர்....

போட்டோ - http://v.duta.us/T4EuNgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/bwC6ygAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬