வேலூர் மக்களவை தேர்தல் - 62.94% 🗳வாக்குப்பதிவு

பணப்பட்டுவாடா உள்ளிட்ட புகார்களால் ❌ரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த 🗳தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளராக ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளராக கதிர்ஆனந்த் உள்பட 2⃣8⃣ பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் மாலை 5⃣ மணி நிலவரப்படி 62.94% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன்படி வேலூர் மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி வரை சட்டமன்றத் தொகுதி 📋வாரியாக பதிவான வாக்கு சதவீதம் விவரம் பின்வருமாறு👇
🔰வேலூர் - 58.55%
🔰அணைக்கட்டு - 67.61%
🔰கே.வி.குப்பம் - 67.01%
🔰குடியாத்தம் - 67.25%
🔰வாணியம்பாடி - 52%
🔰ஆம்பூர் - 52%
இதனிடையே இன்றைய தேர்தலில் 75%க்கும் மேல் 🗳வாக்குகள் பதிவாகலாம் என்று வேலூர் மாவட்ட 💺ஆட்சியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬