🏛சிதம்பரம் 🏢அண்ணாமலைப் பல்கலைக்கழக 👩மாணவி மீது ஆசிட் வீச்சு😨

✍இளவேனில்🌄

🏛கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை 🏢பல்கலைக் கழகத்தில் 💪உடற்கல்வி பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்துவரும் 👩மாணவி ஒருவரை, குத்தாலத்தைச் சேர்ந்த 👨முத்தமிழன் என்பவன் 🏫பள்ளியில் 📚படித்தபோதே காதலித்து💕 வந்ததாகவும், அவனுடைய போக்கு பிடிக்காததால் 👩மாணவி அவரை தவிர்த்து வந்ததாகவும்😳 கூறப்படுகிறது. இதனால் 😟மனமுடைந்த முத்தமிழன் 📆2 நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில், 🏢பல்கலைக் கழக விருந்தினர் ⛪மாளிகை அருகே நேற்று மாணவி நடந்து வந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம்🗣 ஏற்பட்டதையடுத்து, மாணவி 👡செருப்பை எடுத்து காண்பித்ததாக கூறப்படுகிறது. இதனால் 😡ஆத்திரமடைந்த முத்தமிழன், கழிப்பறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட்டை 👩மாணவியின் மீது வீசியுள்ளான்😱. முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டதால் அலறித் துடித்த மாணவியை, அருகில் இருந்தவர்கள் 💉சிகிச்சைக்காக 🏥மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்தில் இருந்தவர்கள், 👨முத்தமிழனுக்கு தர்மஅடி கொடுத்ததில் 🤕காயம் அடைந்த அவனும் சிகிச்சைக்காக 🏥மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். தகவல் அறிந்த 👮போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை🗣 நடத்தி வருகிறார்கள்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬