🏛சென்னையில் 28 லட்சம் 🚌போக்குவரத்து விதிமீறல் வழக்குப்பதிவு😱

✍இளவேனில்🌄

🏛சென்னையில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம்பிடிக்கும் தானியங்கி கேமரா மூலம் சுமார் 28 லட்சம் வழக்கு பதிவு😳 செய்யப்பட்டுள்ளதாக டிராபிக் 👮போலீஸ் தெரிவித்துள்ளது🔈. மேலும், நவீன கேமராக்கள் மூலம் தற்போது வரை சுமார் 🚗8,300 வாகன ஓட்டிகளுக்கு 📜நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. "சென்னை அண்ணா நகரில் 📆ஜூலை மாத இறுதியில் 58 நவீன 📹'ஏ.என்.பி.ஆர்' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது, போக்குவரத்து விதிகளை மீறும்🙄 வாகன ஓட்டிகளை இந்த கேமராக்கள் படம்பிடித்து வருகிறது. ⏫அதிகபட்சமாக ஒரே நாளில் சென்னை அண்ணா நகரில் 63 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று போக்குவரத்து காவல் துறை போலீசார் தெரிவித்துள்ளார்கள்📣. புதிய ✍திருத்தியமைக்கப்பட்ட போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து 🇮🇳நாடு முழுவதும் விதிகளை மீறுபவர்களுக்கு 😡கடுமையான 💸அபராதங்கள் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬