தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் மானியங்கள் விவசாயிகளுக்கு அழைப்பு

  |   Dindigulnews

பழநி, செப். 10: தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்பட உள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர். பழநி வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பயறுவகை விதைகள் கிலோவிற்கு ரூ.25 மானியம் வீதம் 5 ஆயிரம் கிலோ பயறுவகை விதைகள் விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும், பயறு தொகுப்பு திடல் அமைத்திட 1 ஹெக்டேருக்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள், நுண் உரங்கள், களைக்கொல்லி போன்ற ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் 100 விவசாயிகளுக்கு தலா 1 ஹெக்டேர் வீதம் மானியம் அனுமதிக்கப்படும். முதல் பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்திட 1 ஹெக்டேருக்கு தேவையான விதை மற்றும் இடுபொருட்களும், 2ம் பயிராக பயறுவகை உளுந்து சாகுபடி செய்திட பயறுவகை விதைகள் மற்றும் இதர இடுபொருட்கள் என ஹெக்டேருக்கு ரூ.8 ஆயிரம் மானியத்தில் வேளாண் இடுபொருட்கள் 100 ஹெக்டேருக்கு வழங்கப்பட உள்ளது.இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் வேளாண் விரிவாக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/eYsvVQAA

📲 Get Dindigulnews on Whatsapp 💬