மத்திய, மாநில அரசுகளின் உதவிகளை பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

  |   Dindigulnews

திண்டுக்கல், செப். 10: மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவிகளை பெற்று சிறுபான்மையினர் பயன் பெற வேண்டும் என ஆணையத்தின் தலைவர் மகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினருக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் ஜான் மகேந்திரன் தலைமை வகித்தார். கலெக்டர் விஜயலட்சுமி, ஆணையத்தின் செயலாளர் வள்ளலாளர் முன்னிலை வகித்தனர். தமுமுக மாவட்ட துணை செயலாளர் அமீன், துணை தலைவர் ஷாஜகான்,சிபிஎஸ்இ பள்ளிகளின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சிறுபான்மை மாணவர்களை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் தொழில் கடன், சிறுபான்மையினர் பள்ளி ஒதுக்கீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்கு ஆணைய தலைவர் மகேந்திரன் பேசியதாவது, ‘அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சிறுபான்மையின மக்களுக்கு கிடைப்பதற்காக, மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் துவக்கப்பட்டது. சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு ஆணையம் துணை நிற்கும். அதேநேரம் அனைவரும் சகிப்பு தன்மையுடன் வாழ வேண்டும். அனைத்து மதத்தினர்,...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/ifO7IQAA

📲 Get Dindigulnews on Whatsapp 💬