🚀'விக்ரம் லேண்டர்' உடையவில்லை😌-இஸ்ரோ அறிக்கை📣

✍இளவேனில்🌄

🌕நிலவின் மேற்பரப்பை ஆய்வு👀 செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 🚀'சந்திரயான்-2' விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர், 🌕நிலவில் கால் பதிக்க 2.1 கி.மீ. மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் அதனுடனான தகவல் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது❌. இந்நிலையில் தற்போது,"🚀சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர், வேகமாக தரை இறங்கியதால் 4 கால்களில் நிற்காமல் சாய்ந்துள்ளது😐. ஆனால், அது உடைந்துவிடவில்லை😌. மாறாக, ஒரே தொகுப்பாக காட்சி👀 அளிக்கிறது. லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது👏. தரை இறங்கத் திட்டமிட்டிருந்தப் பகுதிக்கு அருகில் லேண்டர் விழுந்துள்ளது. லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து👍 வருகிறோம். இதில் ஈடுபடுவதற்கு 📆14 நாட்கள் வாய்ப்பிருக்கிறது. ⌚சில நேரங்களில் இழந்த தகவல் தொடர்பை மறுபடியும் மீட்ட நிகழ்வுகள் உண்டு😯. அது போல லேண்டருடன் தகவல் தொடர்புக்காக முயற்சிக்கிறோம்🙂. ஆனால், நமது முயற்சி எந்த அளவுக்கு வெற்றிபெறும்🎉 என்பதை அறுதியிட்டு கூறமுடியாது🚫" என்று 🤵விஞ்ஞானிகள் விளக்கம்🗣 அளித்துள்ளார்கள்.

image credit : http://v.duta.us/BIq8CgAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬