🏯அயோத்தி வழக்கினை 📆அக்டோபர் 18ம் தேதிக்குள் முடிக்க திட்டம்👍

✍இளவேனில்🌄

🏛உத்தரபிரதேச மாநிலம், 🏯அயோத்தியில் உள்ள, ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி நில விவகாரத்தை, அமைதியான முறையில் பேசித் தீர்க்க அமைக்கப்பட்ட, 🏛உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, கலிபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவின் முயற்சி தோல்வி😟 அடைந்தது. இதையடுத்து, 🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, 🤵ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை, 📆ஆகஸ்ட் முதல் நாள் தோறும் விசாரித்து🗣 வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்த போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், "அயோத்தி வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் 📆அக்டோபர் 18 க்குள் முடிக்க வேண்டும். இதற்காக விசாரணையை🗣 தினமும் ⌚ஒரு மணி நேரம் நீட்டிக்கவும், சனிக்கிழமை அன்றும் வழக்கை விசாரிக்கவும் தயாராக உள்ளோம்👍. அனைவரும் சேர்ந்து வழக்கை 📆அக்.,18 க்குள் முடிக்க முயற்சி செய்வோம்💪. மனுதாரர்கள்👥 விரும்பினால், மத்தியஸ்தம் மூலம், பிரச்னையை தீர்த்து கொள்ளலாம்😯" எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, இறுதி வாதங்களை அக்.,18 க்குள் முடிக்கப்பட்டால், 📆நவம்பர் 17 க்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு⚖ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது👀.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬