🏛சென்னையில் நடந்த 2 மின் விபத்துகளுக்கு 🔌மின் வாரியம் பொறுப்பில்லை🚫-அமைச்சர் தங்கமணி🎙

✍இளவேனில்🌄

சென்னை 🛣அண்ணா சாலையில் உள்ள 🔌மின்வாரிய தலைமை 🏢அலுவலகத்தில் 📰செய்தியாளர்களை சந்தித்து பேசினார் மின்துறை அமைச்சர் தங்கமணி. அப்போது அவர், "சிட்லபாக்கம் 👤சேதுராஜ் மறைவுக்கு சேதமடைந்த மின்கம்பம் தான் காரணம்😐 என கூறுவதை நான் மறுக்கிறேன்❌. சேதுராஜ் இறப்பதற்கு முன்பாக அந்த வழியாக சென்ற ஒரு 🚛கான்கிரீட் லாரி மின் கம்பத்தை சேதப்படுத்தி விட்டது😳. அந்த மின் கம்பம் நல்ல நிலையில் இருந்ததற்கான 📷புகைப்பட ஆதாரமும் உள்ளது. அதேபோல் முகலிவாக்கத்தில் 🔌மின்சாரம் தாக்கி உயிரிழந்த 👦சிறுவன் மரணத்துக்கும் மின்வாரியத்திற்கும் தொடர்பில்லை🚫" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "🔌மின் பெட்டிகள் மீது சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது 😡கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் ✍இயற்றப்படும்👍" என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், ☔வடகிழக்கு பருவ மழையை எதிர்க்கொள்ள மின் வாரியம் தயார் நிலையில்😯 உள்ளதாகவும், அதற்கான ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬