👩சுபஸ்ரீ 👥பெற்றோருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்😒

✍இளவேனில்🌄

🏛சென்னை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் 👩சுபஸ்ரீ, கடந்த 📆வியாழக்கிழமை அன்று 🚲இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பேனர் சரிந்து விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது 🚛லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்😟. பேனர் வைத்த அரசியல் கட்சி பிரமுகர் 👤ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 👩சுபஸ்ரீயின் 🏡இல்லத்திற்குச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சுபஸ்ரீக்கு அஞ்சலி🙏 செலுத்தினார். பின்னர் 👩சுபஸ்ரீயின் 👵தாய் 👴தந்தைக்கு ஸ்டாலின் ஆறுதல்🗣 கூறினார். 🌞திமுக சார்பில் 💸5 லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையையும் வழங்கினார்😯. பின்னர் 📰செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "பேனர் கலாச்சாரமே இருக்க கூடாது🚫. நினைத்தால் 👤ஜெயகோபாலை உடனே கைது⛓ செய்து விட முடியும்" எனக் கூறினார். மேலும், "இப்பிரச்சனையை அரசியலாக்க விரும்பவில்லை" என்றும் தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬