தவறுதலாக 🏦வங்கிக்கணக்கிற்கு வந்த 💸40 லட்சத்தை செலவு செய்த கணவன் மனைவி😳

✍இளவேனில்🌄

🏛திருப்பூரில் இருக்கும் கார்ப்பரேஷன் வங்கி மூலம் ஒருவர் 💸40 லட்சம் பணப்பரிமாற்றம் செய்த போது தவறுதலாக அது வேறொருவரின் வங்கிக்கணக்கிற்கு சென்றிருக்கிறது😱. வங்கி மூலமாக விசாரணை செய்ததில் அந்த கணக்கு திருப்பூரைச் சேர்ந்த குணசேகரன்(50 ) என்பவருடையது என்று தெரிய வந்தது. இதனால் 🏦வங்கி 🤵அதிகாரிகள் 👤குணசேகரனை தொடர்பு கொண்டு 💸40 லட்சத்தை திருப்பி செலுத்துமாறு கூறியுள்ளனர்😯. ஆனால் அவர் பணத்தைக் கொடுக்காமல் தாமதப்படுத்தி இருக்கிறார்😳. இதனால் 🏦வங்கி சார்பாக 🏛திருப்பூர் 👮காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் புகாரின் அடிப்படையில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை குணசேகரனை கைது⛓ செய்து விசாரணை🗣 நடத்தினர். அதில் 💸40 லட்சத்தை பயன்படுத்தி மனைவி ராதாவுடன் சேர்ந்து 📄சொத்துக்களை வாங்கியதாக அவர் தெரிவித்திருக்கிறார்🔈. இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அதன் விசாரணை, திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் கணவன் மனைவியான 👨குணசேகரன், 👩ராதா ஆகிய 2 பேருக்கும் தலா 📆3 ஆண்டு சிறை⛓ தண்டனை விதித்து 🤵நீதிபதி தீர்ப்பு⚖ வழங்கினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬