🏛வேலூரில் 🏩ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து அறிக்கை📜 அளிக்க உத்தரவு⚖

✍இளவேனில்🌄

🏛வேலூரில் நடைபெற்று வரும் 🏩ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து 📆ஒரு மாதத்திற்குள் அறிக்கை📜 அளிக்க மாவட்ட 💺ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக⚖ பொது கணக்கு குழு தலைவர் 👤துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட 💺ஆட்சியர் 🏢அலுவலகத்தில், 🌞திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில், தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு 👥கூட்டம் நடைபெற்றது. இதில், கணக்கு தணிக்கை துறை அளித்த அறிக்கையின்படி பல்வேறு திட்டங்கள் குறித்து துறைவாரியாக விளக்கங்கள்🗣 கேட்கப்பட்டன. இதற்கு முன்னதாக வேலூரில் நடைபெற்ற பல்வேறு அரசு திட்டப்பணிகளை துரைமுருகன் நேரில் ஆய்வு👀 செய்தார். குறிப்பாக சத்துவாச்சாரி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி, கிரீன் சர்க்கிள் பகுதிகளில் ஏற்படும் 🚌போக்குவரத்து நெரிசல்😳 ஆகியன குறித்து ஆய்வு👀 செய்யப்பட்டது. குழு கூட்ட நிகழ்ச்சிக்கு🎉 பின் 📰செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், கணக்கு தணிக்கை துறை அளித்த அறிக்கையின்படி📜 துறைவாரியாக விளக்கங்கள் கோரப்பட்டதாக தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬