🛩தேஜாஸ் விமானத்தில் பயணித்தார் 💪பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்👏

✍இளவேனில்🌄

🏛கர்நாடாகாவின் பெங்களூரு நகரில் உள்ள ✈எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு 🏛மத்திய 💪பாதுகாப்பு துறை அமைச்சர் 👤ராஜ்நாத் சிங் இன்று வருகை தந்துள்ளார்😯. அவர், 🛩தேஜஸ் போர் விமானத்தில் பறப்பதற்கான உடைகளை அணிந்து கொண்டு சென்றார். இதன்பின் விமானத்தில் ஏறிய அவர் சுற்றியிருந்தவர்களை நோக்கி கைகளை👋 அசைத்து பின்னர் புறப்பட தயாரானார்🙂. தேஜஸ் போர் விமானத்தில் அவருடன் விமான படை தளபதி 🤵என். திவாரி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து 👤ராஜ்நாத் சிங் 🛩விமானத்தில் பறந்து சென்றார்👍. இதனையடுத்து, 🇮🇳இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான இலகு ரக தேஜஸ் போர் விமானத்தில் பறக்கும் முதல் பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்🎉 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬