🌞திமுக'வின் 👥பொது குழுக்கூட்டம் 📆அக்டோபர் 6ம் தேதி நடப்பதாக தகவல்😯

✍இளவேனில்🌄

🌞திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் 👴க.அன்பழகன் ஓர் அறிவிப்பினை🔈 வெளியிட்டுள்ளார்👍. அதில் அவர், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அடுத்த 📆மாதம் 6ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை ⌚10 மணியளவில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். சென்னை, இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பொதுக்குழு 👥உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்🙏" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் கட்சி ஆக்கப்பணிகள், கட்சி சட்டதிட்ட ✍திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை📜 குறித்து விவாதிக்கப்பட🗣 உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬