நிரவ் மோடியின் 🏛நீதிமன்றக் ⛓காவல் நீட்டிப்பு👍

✍இளவேனில்🌄

🏛குஜராத்தைச் சேர்ந்த பிரபல 💎வைர வியாபாரி நிரவ் மோடி (48), மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் 🏦வங்கிக் கிளையில் சுமார் 💰ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இவர் லண்டனில் தலைமறைவாகியுள்ளார் என்று தெரியவந்தது😳. இதனையடுத்து, இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் 👮போலீசார் கடந்த மார்ச் 19ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை ஜாமீனில் விட ✈லண்டனில் உள்ள 🏛வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் மறுத்ததுடன், நீதிமன்றக் காவலை நீட்டித்தது. இந்நிலையில் நிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் 📹வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக 🏛வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்😯. அப்போது, நிரவ் மோடியின் காவலை வரும் 📆அக்டோபர் 17ம் தேதி வரை நீட்டித்து 🏛நீதிமன்றம் உத்தரவிட்டது⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬