'🚀விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை😳'-நாசா📣

✍இளவேனில்🌄

🌕நிலவின் தென் துருவத்தை ஆய்வு👀 செய்வதற்காக 🚀'சந்திரயான்-2' விண்கலத்தை கடந்த 📆ஜூலை 22ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது🎉. கடந்த 📆7ம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், ⏫400 மீ., உயரத்தில், லேண்டர் வரும் போது, திடீரென 🚦சிக்னல் துண்டிக்கப்பட்டது🚫. இந்நிலையில் இஸ்ரோவுக்கு உதவ நாசாவும் முன்வந்தது👍. நாசா சார்பில், கடந்த 📆2009ம் ஆண்டுஅனுப்பப்பட்ட 'நிலவு புலனாய்வு ஆர்பிட்டர்' (எல்ஆர்ஓ) நிலவை சுற்றி ஆய்வு செய்து வருகிறது😯. இந்த ஆர்பிட்டர், தென் துருவ பகுதியில், விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியில் செல்லும் போது 📷படம் பிடிக்கவும், தொடர்பை ஏற்படுத்தவும் முயற்சி செய்யப்பட்டது😐. இதில் கிடைக்கும் படங்கள், தகவல்கள் அனைத்தும், இஸ்ரோவுடன் பகிரப்படும் என நாசா 🤵விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்🔈. ஏற்கனவே, விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த 📻'ஹலோ' என்ற ரேடியோ தகவலை நாசா அனுப்பி இருந்தது😌. இந்நிலையில், எல்ஆர்ஓ ஆர்பிட்டராலும், விக்ரம் லேண்டரை சமிஞ்சை மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை😨 எனவும், 📷படம் பிடிக்க முடியவில்லை😟 எனவும் நாசா தெரிவித்துள்ளது📣. நிலவில்🌕 இருக்கும் நிழல் காரணமாக லேண்டரை, நாசாவால் 📸படம்பிடிக்க முடியவில்லை என தெரிகிறது👀.

image credit : dinamalar

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬